Designed by Iniyas LTD
மாவீரர் பெற்றோர், உறவினர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு
அன்புடையீர்!
காலத்தால் அழியாத எம் காவிய நாயகர்களை தமிழீழ விடுதலைக்கு உவந்தளித்த எமது உறவுகளை மதிப்பளிக்கும் நிகழ்வு உலகத் தமிழர் வரலாற்று மையவளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் மற்றும் போராளிகள் குடும்பநலன் அமைச்சு, பிரித்தானியா, தமிழீழ மாவீரர் பணிமனை ஐக்கிய இராட்சியம், ஆகிய இரு அமைப்புக்களும் இணைந்து நடாத்துகின்றது.
மாவீரர் பெற்றோர், உறவினர் மற்றும் உரித்துடையோர்களே உங்கள் அனைவரையும், தமிழீழ விடுதலைக்காக மாவீரர்களுடன் இணைந்து களமாடிய தோழர்களே, உங்கள் நண்பர்களின் நினைவுகளை அவர்களின் உறவுகளுடன் பகிர்ந்து ஆறுதல்கூறவும் அவர்களை மதிப்பளிக்கவும் உங்களையும் இந்நிகழ்விற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
காலம் ~ 20/11/2016
நேரம் ~ ஞாயிறு காலை 11 மணி
இடம் ~ ஒக்ஸ்போட் OX17 3NX
நன்றி.
மாவீரர் மற்றும் போராளிகள் குடும்பநலன் அமைச்சு,
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்,
பிரித்தானியா.
தொடர்பு 07588470943
தமிழீழ மாவீரர் பணிமனை.
ஐக்கிய இராட்சியம் தொடர்பு 07985 700357
