தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சியில் அபாயகரமான வெடிபொருட்கள் மீட்பு…

கிளிநொச்சி அறிவியல் நகரில் அபாயகரமான வெடிபொருட்கள் மீட்கப்பட்டு உள்ளதாக தெரியவஎருகின்றது.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் , அறிவியல் நகர் பகுதி  வெடி பொருட்கள் அகற்றப்பட்டு பாதுகாப்பான பகுதியாக மீள கையளிக்கப்பட்டது.

தற்பொழுது  குறித்த பகுதியில் யாழ்.பல்கலைகழக வாளகம் இயங்கி வருகின்ற நிலையில் , அங்கு  புதிய கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

இதற்காக  நேற்றைய தினம் நிலத்தினை தோண்டிய போது அபாயகரமான வெடி பொருட்கள் மீட்கப்பட்ட நிலையில் தற்போது கட்டடப்பணிகள் இடை நிறுத்தப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...