தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மட்டக்களப்பில் வெள்ளப்பெருக்கு – ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு….

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை  விட்டு வெளியேறியுள்ளார்கள்.

இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்நிலையில் மட்டக்களப்பு – பாசிக்குடா பகுதியில் 342.3 மில்லிமீட்டர் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடும் மழையையடுத்து வாகரை வடக்கு பிரதேச செயலகப் பிரிவு பகுதியில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து மட்டக்களப்பு வாகரை – ஊரியன்கட்டு கிராம சேவகர் பிரிவில் மூன்று முகாம்களில் வீவுகளைவிட்டு வெளியேறிய மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

382 குடும்பங்களைச் சேர்ந்த 1244 பேர் இவ்வாறு தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஊரியன்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, தட்டுமுனை மாணிக்க வித்தியாலயம்,மற்றும்   தட்டுமுனை பாலர் பாடசாலையில்  அம்மக்கள் தங்கவைப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...