Designed by Iniyas LTD
கிளிநொச்சியில் ஒன்றரை வயது குழந்தைக்கு நடந்த சோகம்!
கிளிநொச்சி – கண்ணகிபுரம் பகுதியில் ஒன்றரை வயது ஆண் குழந்தையொன்று நீர் நிரம்பிய குழியில் விழுந்து உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது சத்தியசீலன் ஜெயந்தன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வறட்சி காரணமாக குழாய் கிணற்றில் பொருத்தப்பட்ட மோட்டாரினை தாழ இறக்கி பயன்படுத்துவதற்காக குழியொன்று வெட்டப்பட்டுள்ளது.
இந்த குழியிலேயே குறித்த குழந்தை விழுந்துள்ளது. இந்த நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என தெரிவித்து அயலவர்களின் உதவியுடன் தேடியுள்ளனர்.
இதன்போது குழந்தை குறித்த குழியில் விழுந்து கிடப்பதை அவதானித்து மீட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அந்த குழந்தை உயிரிழந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.