Designed by Iniyas LTD
கிளிநொச்சியில் ஒரே இடத்தில் இரு விபத்துக்கள்!
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் ஒரே இடத்தில் இரண்டு விபத்துக்கள் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த வீதி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோட்டார் சைக்கிள் மற்றும் கன்ரர் வாகனங்கள் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
தொடர்புடைய பதிவு
இந்நிலையில், பழுதாகிய நிலையில் மின் விளக்குகள் ஒளிரவிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மின்னல் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் பாரவூர்தியின் பின்பகுதியில் மோதி இரண்டாவது விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இருவிபத்துக்கள் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.