Designed by Iniyas LTD
மகனை நல்வழிப்படுத்த முற்பட்டு தீயில் எரிந்து பலியான தாய்!
பாடசாலைக்குச் செல்லாத மகனை நல்வழிப்படுத்தும் நோக்கில் தாய் எடுத்த முடிவு, அவரது உயிரைப் பறித்துள்ளது. இந்தச் சோகச் சம்பவம் புத்தளம் மாவட்டத்தின் பிங்கிரிய பிரதேசத்தில் நடைபெற்றது.
பாடசாலைக்குச் செல்லாது இருக்கும் தனது ஒரே மகனைத் திருத்தும் நோக்கில் தாய் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாகத் தீக்குச்சியை பற்ற வைத்து எச்சரிக்கை விடுத்தபோது தவறுதலாக உடலில் தீப் பற்றி உடல் முழுவதும் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவிக்கும் மகனுக்கும் இடையில் அடிக்கடி சண்டைகள் இடம்பெற்று வருவதாகவும் இதன்போது பல தடவைகள் இவ்வாறு தனது மனைவி தற்கொலை செய்வதாக மகனை எச்சரித்ததாக வும் உயிரிழந்த பெண்ணின் கணவர் தெரிவித்தார்.