Designed by Iniyas LTD
கிளிநொச்சியில் 4 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது….
கிளிநொச்சியில் 4 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்பாணம் நுவரெலியா வழித்தட தனியார் பேருந்து ஒன்றிலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக பேரூந்தை வழிமறித்த பொலிசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நபரையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள கஞ்சாவையும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.