Designed by Iniyas LTD
தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில் ஆராய்வு…
வழக்குத் தாக்கல் செய்யப்படாதுள்ள 102 தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது
இத்தகவலை அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
கடந்தவாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடியபோது இது குறித்து விளக்கமளிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமது விடுதலையை வலியுறுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை தொடர்பில் கொழும்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் சிலருக்கு எதிராக தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன எனினும், சுமார் 102 பேருக்கு எதிரான வழக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை.
அவர்களில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டியவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும்,.
அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பொது மன்னிப்பில் விடுவிக்கப்படக் கூடியவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை படுகொலை செய்த குற்றவாளிகள் போன்றவர்களை விடுதலை செய்ய முடியாது என பிரதமர் கூறியிருந்தததாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.