Designed by Iniyas LTD
கிளிநொச்சி கோணாவிலில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் பலி.

கிளிநொச்சி கோணாவில் காந்தி கிராமம் சந்தியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் பாடசாலை மாணவன் சாவடைந்துள்ளான்
கோணாவில் காந்தி கிராமத்தைச் சேர்ந்த 16 அகவையுடைய செல்லத்துரை நெல்சன்குமார் என்ற சிறுவ னே இவ்வாறு நேற்று இடம்பெற்ற விபத்தில் சாவடைந்துள்ளான்.
நேற்று மாலை 4.30 மணியளவில் காந்திகிராமம் வீதியால் உந்துருளியை ஓடிச் சென்றபோது அவ்வீதியால் வந்த உழவு இயந்திரம் ஒன்றுக்கு வழிவிட முயன்றபோது உந்துருளி வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள பனை மரத்துடன் மோதியுள்ளமையால் உடலில் பலமாக காயம் ஏற்பட்டு இறந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இறந்த நெல்சன்குமார் கோணாவில் அ.த.க.பாடசாலையில் கல்வி கற்று இம்முறை க.பொ.த.சாதாரண தரப்பீட்சை எழுதிவிட்டு பரீட்சைப் பெறுபேற்றினை எதிர்பார்த்திருந்த மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
நெல்சன்குமாரின் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு வைத்திய பரிசோதனைஇ விசாரணைகள் முடிந்ததன் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.