Designed by Iniyas LTD
கிளிநொச்சி பரந்தன் ரசாயன தொழிசாலையை பார்வையிட்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழு…
இன்று கிளிநொச்சி பரந்தன் ரசாயன தொழிசாலை மீள் அமைப்பது தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவினர் இன்று அங்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன்னுடன் ஜப்பான், கொரியா, மற்றும் இலங்கை பொறியியலாளர்களும் தொழிற்சாலையினை பார்வையிட சென்றுள்ளனர்.
இதேவேளை குறித்த குழுவினர் ஆணையிறவு உப்பளம் பகுதிக்கும் சென்று பார்வையிட்டுள்ளனர்.
ஆணையிறவு உப்பளத்திலிருந்து பெறப்படும் இரசாயன கழிவுகளை சூழல் மாசடையாதவாறு எவ்வாறு குறித்த தொழிற்சாலை ஊடக இராயன உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே குறித்த குழுவினர் அங்கு சென்றுள்ளதகவும் கூறப்படுகின்றது.
சுமார் 30 வருடங்களிற்கு மேலாக இயங்கி வந்த பரந்த ரசாயன தொழிற்சாலை மீள இயக்குவது தொடர்பில் நீண்டகாலமாக முயற்சிகள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.