Designed by Iniyas LTD
கிளிநொச்சி பளையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இளைஞர் ஒருவர் கைது..
கிளிநொச்சி பளையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைது செய்ய்யபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
பளை கரந்தாய் பகுதியில் உள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல கிடைத்ததாகவும்,
இதனை அடுத்து நேற்றைய தினம் பயங்கரவாத தடுப்பு பிரினர் குறித்த வீட்டினை சோதனையிட்ட போது , ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கபடுகின்றது.
இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் வீட்டில் இருந்த இளைஞன். ஒருவரை கைது செய்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கைது செய்யப்பட்ட இளைஞனை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்காக வவுனியாவுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.