தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியாவில் சுமார் 100 வருடம் பழமையான ஸ்ரீகந்தசாமி ஆலய தேர் வெள்ளோட்டம்..

வவுனியாவில் சுமார் 100 வருடம் பழமையான ஸ்ரீகந்தசாமி ஆலயத்திற்கு புதிதாக அமைக்கப்பட்ட திராவிட மரத்தேர் இன்று மதியம் 1.30 மணியளவில் வெள்ளோட்டத்தில் இறங்கியுள்ளது.

வவுனியா ஸ்ரீகந்தசாமி ஆலயத்தின் திருவிழா நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் எண்கோண பூசாந்தர சித்திரத் தேர் கடந்த 5 மாதகாலமாக வடிவமைக்கப்பட்டு  நேற்று பூர்த்தியாகியுள்ளது.

குறித்த தேர் 24அடி உயரமும் 9 அங்குலமும் கொண்ட திராவிட மரத் தேர் இரண்டு கோடி ரூபா செலவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 100வருடம் பழமையான ஆலயத்தின் வெள்ளோட்டம் நேற்று இடம்பெற்ற நிலையில்,  இன்று தேர் திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Comments
Loading...