தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக மக்கள் குடிதண்ணீரை பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் வற்றிய நிலையில் காணப்படுகின்றது.iranamadu 02

கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு குளத்தின் நீர் மட்டமே அங்குள்ள கிணறு குளங்களின் நீர் நிலைகளின் நீர் தேக்கத்தினை தீர்மானிக்கின்றது. தற்போது இரணைமடு குளம் வற்றிய நிலையில் காணப்படுவதால் மக்கள்,கால்நடைகள் நீரை பெற்றுக்கொள்ளவதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

குறிப்பாக கிளிநொச்சியின் மேற்கு பகுதி தொண்டமாநாறு, மலையாள புரம், கனகபுரம், திருநகர் போன்ற பகுதிகளில் குடிதண்ணீர் பிரச்சனை நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...