Designed by Iniyas LTD
கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் வெள்ள அனர்த்தம் காரணமாக 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதம்…
கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் வெள்ள அனர்த்தம் காரணமாக 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச சபைகள், மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள வீதிகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன.
இவற்றுள் பல வீதிகள் மிகவும் மோசமாகவும், ஏனையவை பகுதியளவிலும் சேதமுற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சேதமுற்றுள்ள வீதிகளை விசேட நிதி ஒதுக்கீட்டில், விரைந்து புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ம்தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



