Designed by Iniyas LTD
கிளியில் வீடுகள் அற்று வாழ்பவர்களுக்கு இவ்வருடத்துக்குள் வீடுகள்!
கிளிநொச்சி மாவட்டத்தில் வீடுகள் அற்ற நிலையில் வாழ்ந்துவரும் மக்களுக்கு, இவ்வருடத்திற்குள் வீடுளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி–புளியம்பொக்கணை பெரியகுளத்தில் யு.என்.கபிடட் நிறுவனத்தி னால் அமைக்கப்பட்ட பொதுநோக்கு மண்டபத்தை, நேற்று (திங்கட்கிழமை) திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் காணிப் பிரச்சினைகள் காணப்படும் நிலையில், குறித்த பொதுநோக்கு மண்டபத்தை அமைப்பதற்கு காணியை வழங்கியவர்களுக்கு நன்றியை தெரிவிப்பதாக இதன்போது அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

மேலும் இப்பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்ப டவுள்ளதாக தெரிவித்த அவர், அவற்றுள் வீதி புனரமைப்பு, வீட்டுத்திட்டம், வாழ்வாதாரம், காணி பிரச்சினை என்பன முக்கிய இடத்தை வகிப்பதாகவும் தெரிவித்தார். அத்தோடு, தற்காலிக இடத்தில் இயங்கும் பிரதேச செயலகம் மிகவிரைவில் புதிய கட்டிடத்தில் மக்கள் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் முகுந்தன், கண்டாவளை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், யு.என்.கபிட்டட் நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட முகாமையாளர், பொறியியலாளர்கள், கிராம சேவகர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், துறைசார் உழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.