தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியாவில் நாளை தமிழ் தேசிய வீரர்கள் தினம்!

p54(1)வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை மற்றும் குட்டிமணி உட்பட்ட 53 பேரின் நினைவாக அனுஷ்டிக்கப்படும் தமிழ்த் தேசிய வீரர்கள் தினம், நாளை (புதன்கிழமை) வவுனியாவில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில், வவுனியா நகர மண்டபத்தில் நாளை மாலை 3 மணிக்கு இந் நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதில், நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

Comments
Loading...