தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கீரிமலை நகுலேஸ்வரார் ஆலய வருடாந்த கொடியேற்ற நிகழ்வையொட்டி பேருந்து சேவைகள்

கீரிமலை நகுலேஸ்வரார் ஆலய வருடாந்த கொடியேற்ற  நிகழ்வையொட்டி எதிர் வரும் 14 ம் திகதி விசேட பஸ் சேவைகளை காங்கேசன்துறை வீதி மாவிட்டபுரம் ஊடாக கீரிமலை வரை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.பேருந்து சேவை

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் சம்பந்தமாக கலந்துரையாட வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் நடை பெற்றது.  ஆலய தர்மகார்த்தா சபை உறுப்பினர்கள் பிரதேச சபையின் தலைவர் மற்றும் உயர் அதிகாரிகள் தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி சுகாதாரப் பரிசோதகர்கள் தனியார் மினிபஸ்சங்க உறுப்பினர்கள் இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

கொடியேற்றத்திற்க்கு செல்லும் அடியவர்களின் நன்மை கருதி 14 ம் திகதி கொடியேற்றத்தின் அன்று மாவிட்டபுரம் வரை நடைபெறும் 769 ம் இலக்க தனியார் மினி பஸ் சேவையை கீரிமலை வரை நடத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...