தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் பல்கைலையில் கல்விபயிலும் வெளிமாவட்ட தமிழ் மாணவிகளின் விபரம் திரட்டும் சிறிலங்கா புலனாய்வாளர்கள் – அச்சத்தில் மாணவர்கள்!!!

JAFFNAFP927-thumbதமிழீழ பல்கலைக்கழகங்களில் ஒன்றான யாழ் பல்கலையில்  கல்விகற்கும் வெளி மாவட்ட மாணவிகளின் விபரங்களை அண்மைகாலமாக இரகசியமான முறையில் சிறிலங்கா இராணுவ புலனாய்வாளர்கள் திரட்டிவருவதாக தெரியவந்துள்ளது.

இதனால் பெற்றோரை பிரிந்து கல்விக்காக தங்கியிருந்து கல்விபயிலும் தமிழ் மாணவிகள் அச்சத்தில் உள்ளதாக தெரியவருகின்றது. இது அவர்களுடைய கல்விக்கு இடையூறாக இருப்பதுடன், அவர்களின் பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக அமைகின்றது.  மேலும் சிறிலங்கா புலனாய்வாளர்கள் இவ்வாறு தமிழ் பெண் மாணவிகளை இலக்கு வைத்து விபரம் திரட்டுவது மிகவும் சந்தேகத்தையும் ,அச்சத்தையும் தோற்றுவிப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தை வெளியேற்றி விட்டதாக பல மேடைப்பேச்சுக்களை சிறிலங்கா சனாதிபதியும் , அவரின் குடும்ப அமைச்சர்களும் சொல்லிக்கொண்டு இரகசியமான முறையில் திட்டமிட்ட ஒடுக்கு முறைகளை செய்துவருகின்றமை அண்மைகாலங்களில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...