Designed by Iniyas LTD
குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை அரசு நீடிக்கின்றது
குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 2015 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உணவுத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளை 2015 ஆம் ஆண்டிற்கு புதுப்பிக்கும் வகையில் உள்தாள்களை அச்சிட்டு, குடும்ப அட்டைகளில் இணைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை நீட்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் குறிப்பிட்டுள்ளார். அடுத்த மாதம் நியாயவிலை கடைகளில், 2015 ஆம் ஆண்டுக்கான உள்தாளை குடும்ப அட்டையுடன் இணைத்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், எப்பொருளும் வேண்டா குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்கள் கணினி மூலம் புதுப்பித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.