Designed by Iniyas LTD
தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துகொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை, இலங்கை கடற்படையினர் நேற்று சிறைபிடித்ததை பன்னீர் செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளும் இலங்கையின் வசம் உள்ளதையும் பன்னீர் செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு, தமிழக மீனவர்கள் 38 பேரையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பன்னீர் செல்வம் கேட்டுகொண்டுள்ளார்.