Designed by Iniyas LTD
குதிக்கால் வெடிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள..

நீரிலேயே நீண்ட நேரம் இருந்தாலும் , கால்கள் அதிக நேரம் நீரில் ஊறி, சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்ப்பசை அனைத்தையும் வெளியேற்றி விடும். இதனால் குதிகால் வெடிப்பு ஏற்படலாம்.
மேலும் உடல் எடை அதிகமாக இருந்தாலும் குதிகால் வெடிப்பு ஏற்பட நேரிடும்.ஏனெனில் கால்களுக்கு அதிக அளவில் அழுத்தம் கொடுப்பதால் இந்த பிரச்சனையை சந்திக்க கூடும்.
தீர்வு…
எண்ணெய் மசாஜ்

தினம் தோறும் இரவில் உறங்குவதற்கு செல்லும் முன்பு பாதாம் எண்ணெய் ,நல்லெண்ணெய்,ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கொண்டு பாதங்களை மசாஜ் செய்து காலையில் கால்களை நன்கு கழுவி வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.
எலுமிச்சைசாறு

எலுமிச்சை சாறு சருமத்தின் வறட்சிக்கு மிக சிறந்த தீர்வாகும்.எலுமிச்சை சாறை காலையில் எழுந்தவுடன் சுடுநீர் கலந்து பருகி வர சருமம் பொலிவு பெறும்.உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் வெளியேறும்.
. எலுமிச்சை சாறை,பயித்தம் பருப்பு மாவு , அரைத்த வேப்பிலை விழுது ,கஸ்தூரி மஞ்சள், ஆகியவற்றுடன் நன்கு கலந்து பித்த வெடிப்பு இருக்கும் இடங்களில் பூசி வர காலில் உள்ள பித்த வெடிப்புகள் நீங்கி கால் அழகாக மாறும்
வெங்காயம்

வெங்காயம் நமது உடலில் ஏற்படும் பலவகையான பிரச்சனைகளுக்கு அருமருந்தாக பயன்படுகிறது.வெங்காயத்தை வதக்கி அதனை நன்கு அரைத்து பாத வெடிப்பு இருக்கும் இடங்களில் பூசி வர பித்தவெடிப்பு நீங்கும்.
மருதாணி

மருதாணி பவுடருடன் ,தேங்காய் எண்ணெய் ,டீ தூள் கலந்து பூசி வர பித்த வெடிப்புகள் நீங்குவதோடு பாதம் அழகாகவும்,பொலிவாகவும் இருக்கும்.
உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை நன்கு காய வைத்து தூளாக்கி பின்பு அதை தண்ணீர் விட்டு பேஸ்ட் ஆக்கி காலில் வெடிப்பு இருக்கும் இடங்களில் பூசி வருவதால் பித்தவெடிப்பு மறையும் .