Designed by Iniyas LTD
கோட்டபாய ராஜபக்ஷ சிறைக்குச் செல்வார் என்பது உறுதி
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ சிறைக்குச் செல்வார் என்பது உறுதி என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
களனி பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபோது அவர் இதனைத் வெளிப்படுத்தியுள்ளார்.
கோட்டாபாயவுக்கு எதிராக நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள ஊழல் மோசடி வழக்குகளைப் பார்த்தால் சிறைக்குச் செல்வார் என்றே தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கோட்டாபாய ராஜபக்க்ஷ இந்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருப்பார் என்பதே எனது நிலைப்பாடு என்றும்
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.