தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

குமுதினிப் படுகொலை 33 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..

நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள குமுதினிப் படகு படுகொலை நினைவுத் தூபிக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து  64 பயணிகளுடன் சென்ற  குமுதினி  படகு, கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேரை வெட்டி படுகொலை செய்தது

33 ஆவது ஆண்டு

இந்த படுகொலை  சம்பவத்தின்  துயரம் நிறைந்த  33 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

இதனை நினைவு கூரும் முகமாக நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ள   நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

 

Comments
Loading...