Designed by Iniyas LTD
நெடுந்தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் – அமைச்சர் ரவி கருணாநாயக்க ..
நெடுந்தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு அந்தப் பிரதேச மக்களின் மின் தேவை நிறைவு செய்யப்பட உள்ளதாக மின்வலு மற்றும் சக்தி வளத்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
அண்மையில் நெடுந்தீவுக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலமைகளை ஆராய்ந்த பின்னர் அவர் இதனை அறிவித்துள்ளார்.
நெடுந்தீவில் வாழும் மக்களின் மின் தேவையை நிறைவேற்றவேண்டும் என்றும், அதற்கு நெடுந்தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதின் முதற்கட்டமாக நெடுந்தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான கேள்வி கோரல் விரைவில் அறிவிக்கப்படும்” என்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.