Designed by Iniyas LTD
குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை- ரிசர்வ் வங்கி
வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
இதையடுத்து குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 7.5 சதவிகிதமாகவே தொடர உள்ளது மேலும் சிஆர்ஆர் எனப்படும் வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதமும் 4 சதவிகிதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
நடப்பாண்டில் ஏற்கனவே 2 முறை வட்டி குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பலன் மக்களையும் தொழிற் துறையையும் சென்று சேர்வதை பொறுத்தே அடுத்த ஆய்வுக் கூட்டத்தில் வட்டிக் குறைப்பு குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.