தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

குற்றவாளிகளை நல்லாட்சி அரசாங்கம் பாதுகாக்கிறது?

1466397367_download (3)குற்றவாளிகளை தண்டித்து நாட்டை தூய்மைப்படுத்த வந்தவர்களே இன்று குற்றவாளிகளை பாதுகாத்து வருவதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம்சுமத்தியுள்ளார்.
வடக்கு, இந்தியாவிற்கும் தெற்கு சீனாவிற்கும் குத்தகைக்கு விடப்பட்டு நாட்டின் வளங்கள் அனைத்தும் தாரைவார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 மக்களிற்கு தீர்வை பெற்றுத்தருவதாக கூறி சர்வதேச வியாபாரத்திற்குபாதையமைத்துக்கொடுக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமைகள் மற்றும் தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் இன்றைய அரசியல் சூழலானது மிகவும் மேசமான நிலையிலுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சியில் இருந்தவர்களின் மோசடிகள், ஊழல்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் வெறுப்பும், அவநம்பிக்கையும் இருந்த நிலையில் அவர்களை விரட்டியடித்து நல்லாட்சி என கூறி ஆட்சி அமைத்தவர்கள் இன்று முன்னைய ஊழல் மோசடிக்காரர்களை இணைத்துக்கொண்டு மேலும் ஊழல்மிக்க நாடாக இலங்கையை மாற்றிவிட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Loading...