Designed by Iniyas LTD
குவைத் மீதான ஐ எஸ் தாக்குதல் திட்டம் முறியடிப்பு!
குவைத்தில் உள்ள ஒரு ஷியா மசூதியின் உள்ளே கடந்த ஆண்டு தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஐ.எஸ். தீவிரவாதிகளை வேட்டையாடுவதில் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டியது.
இதையடுத்து, உள்நாடு மற்றும் அண்டைநாடுகளில் இருந்தபடி குவைத் மீது தீவிரவாத தாக்குதல்களை நடத்த முயன்ற ஐ.எஸ். தீவிரவாதிகளின் இருப்பிடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டதாகவும், இந்த தற்காப்பு நடவடிக்கையின் மூலம் தீவிரவாதிகளின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளின் பெயர்கள் மற்றும் அவர்கள் எந்த நாடுகளில் இருந்து கைது செய்யப்பட்டார்கள்? உள்ளிட்ட விவரங்கள் இந்த அறிவிப்பில் இடம்பெறவில்லை.