தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மட்டு கல்லடி பாலத்தில் குதித்து இளைஞன் தற்கொலை!

HPxbZNzமட்டக்களப்பு மாவட்டத்தின், கல்லடி பழைய பாலத்தில் சுமார் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் நேற்று பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தற்கொலை செய்த இளைஞன் மட்டக்களப்பு கூழாவடி பிரதேசத்தைச் சேர்ந்த கிஷோர்(வயது-19) என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞனை காப்பாற்றும் முயற்சியில் மட்டக்களப்பு தலைமையக ஸ்ரீ பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இளைஞன் தற்கொலை செய்த கல்லடி பழைய பாலத்தில் அதிக மக்கள் கூட்டம் காணப்படுவதாக அறியமுடிகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக ஸ்ரீ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...