தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கூடங்குளம்: டிசம்பரில் 2-ஆவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கும் என அறிவிப்பு

kudankulamகூடங்குளம் அணு மின்நிலையத்தின் 2-ஆவது அணு உலையில் டிசம்பர் முதல் வர்த்தகப் பயன்பாட்டுக்காக மின் உற்பத்தி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ரஷிய தயாரிப்பான விவிஐஆர்-1000 அணு உலை நிறுவப்பட்டுள்ளது.

இந்த அணு உலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமைக்கப்பட்டது. கடந்த மே மாதம் இங்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு கடந்த ஜூலை 10-ம் தேதி அணு உலை இயக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை தென்பிராந்திய மின்தொகுப்புடன் சேர்ப்பதற்கான பணி ஆகஸ்ட் 29-ஆம் தேதி முடிவடைந்தது.

கூடங்குளத்தில் நிறுவப்படும்  3 மற்றும் 4-ஆவது அணு உலைகளில் வரும் 2022, 2023-ஆம் ஆண்டுகளில் மின் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக,  கடந்த 2014 டிசம்பரில் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது. ரஷிய நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டுள்ள இந்த அணுமின் நிலையத்தில் எரிபொருளாக செறிவூட்டப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது. இதனை இந்த அணு மின்நிலையம் பயன்பாட்டில் உள்ள வரை வழங்க ரஷியா ஒப்புக் கொண்டுள்ளது.

Comments
Loading...