Designed by Iniyas LTD
கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் நாளை மறுநாள்.
எதிர்வரும் 27ஆம் திகதி காலை 9 மணிக்கு யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் சமகால அரசியல் நிலைவரம் இரணைமடு – யாழ். நீர் விநியோகத் திட்டம் மற்றும் மாகாண சபை நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாளை மறு நாள் நடைபெறவுள்ள இக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
