தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கூட்டமைப்பு வேறு வழியில் பயணிக்க வேண்டி வரும்; ஆரூடம் கூறுகிறார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

மார்ச் மாதத்திற்குப் பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வேறு வழியில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.4

கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்தார். மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவாக் கூட்டத் தொடரில் அமெரிக்கா இலங்கை அரசுக்கு எதிரான ஒரு பிரேரணையைக் கொண்டு வரும் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது உறுதிப்படுத்தியிருந்தார்.

அதுமட்டுமல்லாது, தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வொன்று எட்டப்பட வேண்டுமெனில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா நிச்சயமாக பிரேரணை ஒன்றைக் கொண்டு வரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தனும் நிஷாவுடனான சந்திப் பின்போது தெரிவித்திருந்தார்.

இந்த விடயங்கள் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன என்று வினவியபோதே அமைச்சர் வாசுதேவ மேற்கண்டவாறு தெரிவித்தார். கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு அவர்கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தார். “தற்போது அமெரிக்காவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எப்படி இலங்கை அரசை சிக்கவைப்பது என்றே சிந்தித்து வருகின்றன. இவர்களுடைய செயற்பாடுகளைப் பார்க்கும் போது இதுதான் தென்படுகிறது.

 ஆனால், அடுத்த மார்ச் மாதத்திற்குப் பிறகு நிச்சயமாக கூட்டமைப்பு வேறு வழியில் பயணிக்க வேண்டிய நியொன்று ஏற்படும். இது உறுதி.” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Comments
Loading...