Designed by Iniyas LTD
கூட்டமைப்பை பிளவு படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி ஒரு போதும் பலிக்காது – இரா.சம்மந்தன்
அரசாங்கம் ஏனைய கட்சிகளைப் பிரித்து துருவப்படுத்தி வெற்றி கண்டது போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பிளவுபடுத்த நினைக்கின்றது. அதற்காக சில ஊடகங்களையும் பயன்படுத்த முனைகின்றது.
கூட்டமைப்பை பிளவு படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி ஒரு போதும் பலிக்காது. கூட்டமைப்பு தமிழ் மக்களின் தியாகத்தால் கட்டி யெழுப்பப்பட்ட ஓர் கட்சியாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் சிரேஷ்டபாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழத் தேசியக் கூட்டமைப்பு இரண்டாகப் பிளவு பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் அவரிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.