தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொலைசெய்யப்பட்ட சசிகுமார் மனைவி தற்கொலை முயற்சி!

sasikumar-murder-600-28-1475036096கோவையில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் மனைவி யமுனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கோவையில் கடந்த 22-ஆம் தேதி இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் வெட்டு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி நேற்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், சசிகுமாரின் மனைவி யமுனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை தனது வீட்டில் யமுனா விஷ மருந்து பவுடரை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். துடியலூரில் உள்ள கல்பனா மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments
Loading...