தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கேப்பாபிலவில் எரிபொருள் விற்பனையை தடை செய்த பொலிஸார்.. .

கேப்பாப்புலவில் தனியார் எரிபொருள் விற்பனை நிலையம் ஒன்றில் எரிபொருட்கள் விற்பனை செய்வதை பொலிஸார் தடை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேப்பாப்புலவில் இராணுவத்தினரினால் விடுவிக்கப்பட்ட காணி ஒன்றில் தனியார் ஒருவரினால் குறித்த எரிபொருள் நிலையம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் எரிபொருள் நிலையத்திற்கு எதிரே பாரிய இராணுவ முகாம் ஒன்று அமைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன் காரணமாக அந்த இடத்தில் எரிபொருள் விற்பனை செய்ய முடியாது என பொலிஸார்  தடை விதித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...