தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சதொச வளாகத்தில் இன்று மீடகப்பட்ட மனித எச்சங்கள் – தாய் மற்றும் பச்சிளங்குழந்தை

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இன்று 43 ஆவது தடவையாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் இன்றைய  அகழ்வின் போது, மீட்கப்பட்ட எச்சங்கள்  தாய் மற்றும் பச்சிளம் குழந்தை எச்சமுமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மனித புதைகுழி அகழ்வின் போதும் சந்தேகத்திற்கு இடமான ஒரு முதிர்ந்த மனித எச்சமும் அதன் அருகே சிறிய எலும்புகளை கொண்ட மனித எச்சமும் காணப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து குறித்த இரு மனித எச்சங்களையும் சூழ்ந்திருந்த களிமண்களை அகற்றிய போது  அருகருகே புதைக்கப்பட்டிருக்கும் தாயும் பிள்ளையும் என சந்தேகிக்கப்படுகின்ற வகையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...