தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொலைக் குற்றத்திற்காக இருவருக்கு மரண தண்டனை!

TamilDailyNews_8749309778214கொலைக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இருவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி ராகலை மெதவத்தையைச் சேர்ந்த 48 வயதுடைய சோமசிறி என்பவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அசோக பத்திரண மற்றும் கொலை செய்யப்பட்டவரின் மகள் விசோகுமாரி விக்ரமசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

திருமணமான குறித்த இருவருக்குமிடையில் தகாத உறவு முறை காணப்பட்டதை தந்தையான சோமசிறி அறிந்த நிலையிலேயே இருவரும் கொலை செய்துள்ளனர்.

இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 21 வருடங்களாக இடம்பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

அத்துடன் அசோக பத்திரணவிற்கு ஆறு மாத கடுங்காவலுடன் கூடிய மரண தண்னை விதிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...