Designed by Iniyas LTD
கொல்கத்தா டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து 204 ரன்னில் தோல்வி
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியா முதல் இன்னிங்சில் 316 ரன் குவித்தது. புஜாரா 87 ரன்னும், ரகானே 77 ரன்னும் எடுத்தனர். மேட் ஹென்றி 3 விக்கெட்டும், போல்ட், வாக்னர், ஜித்தன் பட்டேல் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன் என்ற பரிதாப நிலையில் இருந்தது. வாட்லிங் 12 ரன்னும், ஜித்தன் பட்டேல் 5 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று (ஞாயிற்றுக் கிழமை) 3-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து ஆடினார்கள்.
பட்டேலும், வாட்லிங்கும் இந்திய பந்துவீச்சை நேர்த்தியுடன் எதிர்கொண்டு விளையாடினார்கள். 39.1-வது ஓவரில் நியூசிலாந்து அணி 150 ரன்னை தொட்டது.
குறிப்பாக பட்டேல் அடித்து விளையாடி ரன்களை சேர்த்தார். நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்னில் இருந்த போது மழையால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
மழை தூறல் விட்டதும் இந்த ஜோடி தொடர்ந்து நேர்த்தியுடன் விளையாடியது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினார்கள். 77 பந்துகளில் இந்த ஜோடி இணைந்து 50 ரன்னை எடுத்தது. இருவரது போராட் டத்தால் நியூசிலாந்து அணி சரிவில் இருந்து சற்று மீண்டது.
இந்த ஜோடியை ஒரு வழியாக அஸ்வின் பிரித்தார். ஜித்தன் பட்டேல் 47 ரன்னில் அவரது பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 182 ஆக இருந்தது. இந்த ஜோடி 14.5 ஓவரில் 60 ரன் எடுத்தது. அடுத்து சிறிது நேரத்தில் 9 விக்கெட்டாக வாட்லிங் ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை சமி கைப்பற்றினார். நியூசிலாந்து அணி 53 ஓவரில் 204 ரன்னில் சுருண்டது. இது இந்தியாவின் ஸ்கோரை விட 112 ரன் குறைவாகும்.