Designed by Iniyas LTD
மானிப்பாயில் டெங்கு விழிப்புணர்வு சேவை!
டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மானிப்பாய் பிரதேச சபையினால் டெங்கு விழிப்புணர்வும், சிரமதான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்புடைய பதிவு
அந்தவகையில் இன்றைய தினம் காலை 9 மணியளவில் மானிப்பாய் ஆலடி வீதியில் இருந்து மருதடி ஆலயம் வரையுள்ள வீதியோரங்களில் காணப்படும் நுளம்பு பெருகக் கூடிய இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.மேலும் டெங்கு பற்றிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டன.
இப்பணிகளில் மானிப்பாய் பிரதேசத்தில் இயங்கும் சமூக சேவை நிறுவனங்களும்,தங்களது ஒத்துழைப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.