Designed by Iniyas LTD
கொழும்பில் இன்று தமிழ் இலக்கிய பெருவிழா!
கொழும்பு கலை இலக்கிய ஊடக நண்பர்களும், தமிழகத்தின் இனிய மாதர் சஞ்சிகையும் இணைந்து நடத்தும் தமிழ் இலக்கிய பெருவிழா இன்று மாலை ஐந்து மணிக்கு நடைபெறவுள்ளது.
கொழும்பு தமிழ்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பேராசிரியர் சபா ஜெயராசா தலைமையில் இலக்கிய பிறப்பாளர் ஹசின் உமர் முன்னிலையில் இந்த விழா நடைபெறவுள்ளதாக செயற்பாட்டு குழுவினர் அறிவித்துள்ளார்கள்.
இந்த தமிழ் இலக்கிய பெருவிழாவில் தமிழக அறிஞர்களின் சிறப்பு சொற்பொழிவு, நூல் வெளியீடு,விருது வழங்கல் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெறவிருக்கிறது.