Designed by Iniyas LTD
கொழும்பில் குழந்தையுடன் பிச்சை எடுத்த பெண் கைது!
கொழும்பில் கைக்குழந்தையுடன் யாசகம் பெற்ற பெண்ணொருவர் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதவழிபாட்டுத்தலம் ஒன்றின் அருகில் பெண்ணொருவர் கைக்குழந்தையுடன் யாசகம் பெறுவதாக பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே அவர் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூரப்பிரதேசமொன்றைச் சேர்ந்த தான் கொழும்புக்கு தொழில் தேடி வந்திருந்த நேரத்தில் காதல் தொடர்பொன்றை ஏற்படுத்திக் கொண்ட நபர் தன்னை ஏமாற்றிவிட்டு, கைவிட்டதன் காரணமாக யாசகம் பெற நேர்ந்துள்ளதாக குறித்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து அவர் வைத்திருந்த குழந்தை உண்மையில் அவரது குழந்தை தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அதிகாரிகள் சோதனை ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
அவ்வாறு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் தாய்க்கும் குழந்தையும் மறுவாழ்வொன்றை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைக்குழந்தைகளுடன் யாசகம் பெறும் தாய்மார் தொடர்பில் 1929 இலக்கத்துக்கு தகவல்களை வழங்குமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.