Designed by Iniyas LTD
யாழில் தொடரும் பயங்கரம்! அச்சத்தில் மக்கள்
வர்த்தகருக்கு மயக்க மருந்து விசிறிவிட்டு வர்த்தக நிலையத்திலிருந்த வியாபாரப் பணம், அவர் அணிந்திருந்த தங்க மோதிரம் மற்றும் அலைபேசி ஆகியவற்றை திருடர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர்.
மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்ட வர்த்தகர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் மிருசுவில் உசனில் நேற்றுமுன்தினம்மாலை இடம்பெற்றது.
வர்த்தக நிலையத்தில் பொருள்கள் வாங்க வந்தவர்கள், அங்கு வர்த்தகர் இல்லாததால் அருகில் உள்ள வீட்டில் விசாரித்துள்ளனர். அவர் அங்கு வரவில்லையெனக் கூறிய குடும்பத்தினர் கடையினுள் சென்ற பார்த்தபோது அங்கு மயங்கிய நிலையில் காணப்பட்டார். அதையடுத்து அவர் சாவகச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சையளித்த மருத்துவர்கள் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
வர்த்தகர் அணிந்திருந்த மோதிரம் அவரது அலைபேசி மற்றும் பொருள்கள் கொள்வனவு செய்ய வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பணம் ஆகியவை காணாமல் போயுள்ளதென உறவினர்களால் தெரிவிக்கப்பட்டது.
இதே இடத்தைச் சேர்ந்த வே.சுப்பிரமணியம் (வயது 68) என்பவரே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவராவார். கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.