தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொழும்பில் வசிக்கும் தமிழர்களை பயமுறுத்தும் படையினர்

கொழும்பின் குறைந்த வருமானத்தை பெறும் மக்களிடம் செல்லும் படைத் தரப்பினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பயமுறுத்தி வருவதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று குற்றம்சாட்டியுள்ளது. குறித்த மக்களிடம் செல்லும் படையினர் மஹிந்த ராஜபக்ச தவிர்ந்த ஏனையோருக்கு வாக்களிப்பவர்கள் தொடர்பில் கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்படும் என்று அச்சுறுத்துவதாக இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.sri army

இதேவேளை தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்களை பயமுறுத்தும் படையினர் மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்காது போனால் சொந்த குடியிருப்புக்களில் இருந்து அகற்றப்படுவார்கள் என்று எச்சரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த எச்சரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தமக்கு வாக்களிக்காதவர்கள், வேறு இடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று தாம் தந்தையிடம் கூறியுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டதாக அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

Comments
Loading...