Designed by Iniyas LTD
கொழும்பு மோதரையில் துப்பாக்கி சூடு..
கொழும்பு, மோதரை முத்துவெல்ல பிரதேசத்தில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 62 வயதுடைய கோபாலபிள்ளை பாலசந்திரன் என்ற நபர் பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவருடைய தந்தை என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இன்று நண்பகல் 12.50 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிகப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகவும், சந்தேகநபர்களை கைது செய்வதற்காக மோதரை பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளஅவர் தெரிவித்துள்ளார்.