Designed by Iniyas LTD
கோத்தபாய அரசியலில் பிரவேசிப்பது குறித்து அரசுக்குள் இன்னும் ஆலோசிக்கப்படவில்லை
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அரசியலில் பிரவேசிப்பது குறித்து அரசுக்குள் இன்னும் ஆலோசிக்கப்படவில்லை என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர பங்களிப்புச் செய்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை பொதுத் தேர்தலில் களமிறக்கினால் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்திருந்தார். இது குறித்து அரசின் கருத்து என்ன? அரசுக்குள் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதா? என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், அவ்வாறான கலந்துரையாடல் இடம்பெறவில்லை. பொதுத்தேர்தலுக்கான அரசின் வேட்புமனுக் குழு இன்னும் கூடவே இல்லை என்று சிரித்தவாறே பதிலளித்தார்.