Designed by Iniyas LTD
போர்க்குற்றவாளி ஜெகத் டயசின் காலில் விழ நிர்ப்பந்திக்கப்பட்ட மாணவர்கள்
கடந்த 26ம் நாள் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை என்று கூறி முல்லைத் தீவில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினர் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.இதில் கலந்து கொள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் அழைத்துவரப்பட்டனர்.
இதன் போது சிறிலங்காப் படைகளால் வழங்கப்பட்ட கொப்பிகளையும் எழுது பொருட்களையும் பெற்றுக் கொள்ள போர்க்குற்றவாளி மேஐர் ஜென்ரல் ஜெகத் டயசின் காலில் விழுந்து வணங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வில் சிறிலங்கா அரசுடன் சேர்த்தியங்குகின்ற முன்னாள் எம்.பி. கனகரத்தினம் முல்லைத் தீவு கல்வி பணிப்பாளர் உதயராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
