Designed by Iniyas LTD
கோத்தாவின் பேச்சை தட்டிக்கழித்த காவற்துறை அதிகாரி இடமாற்றம்
பாரிய கொழும்பு பிரதேசத்திற்கு பொறுப்பாக பணியாற்றிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுமித் எதிரிசிங்க மற்றும் களுத்துறை மற்றும் பாணந்துறை பிரதேசங்களுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
களுத்துறை மற்றும் பாணந்துறை பிரதேசங்களுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய வீ. இந்திரன் பொலிஸ் தலைமையகத்தின் நலன்புரி நடவடிக்கைகளுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுமித் எதிரிசிங்கவின் இடமாற்றத்தை அடுத்து கல்கிஸ்ஸ மற்றும் நுகேகொட பிரதேசங்களுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபராக ஜீ.டி.ஏ.கே. சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகர் பிரதேசங்களில் அண்மையில் ஏற்பட்ட இன மோதல்களுடன் தொடர்புடைய பொதுபல சேனா அமைப்பின் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுவிக்குமாறு மேலிடத்தில் இருந்து உத்தரவிடப்பட்ட போதும், அவர்களை விடுவிக்க பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்திரன் மறுத்திருந்தார்.
இதனையடுத்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் மற்றுமொரு பொலிஸ் உயர் அதிகாரி தலையிட்டு பொதுபல சேனா அமைப்புடன் தொடர்புடையவர்களை விடுதலை செய்ததாக கூறப்பட்டது. இதனடிப்படையிலேயே பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்திரனின் இடமாற்றம் நடந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.