Designed by Iniyas LTD
கோப்பாய் போலீஸ் மீது வாள்வெட்டு நடத்தியவர்கள் கைது?
யாழ்ப்பாணம், கோப்பாய்ப் பகுதியில், பொலிஸார் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தில், இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, ஸ்ரீ பொலிஸார் தெரிவித்தனர்.
20, 23 வயதுகளையுடைய குறித்த 2 இளைஞர்களும், இன்று (01) காலை கைதுசெய்யப்பட்டனர் என்று, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கொக்குவில் நந்தாவில் பகுதியில், பகல்நேர நடமாடும் கடமையில் ஈடுபட்டிருந்த கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர் இருவர் மீதே, கடந்த ஞாயிற்றுக்கிழமை (30), இந்த வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது ஸ்ரீலங்கா பொலிஸ் உத்தியோகத்தர்களான சுரேன் (வயது 26), தம்மிக்க (வயது 36) ஆகிய இருவரும் காயங்களுக்கு உள்ளாகி, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.