Designed by Iniyas LTD
வவு-மூன்று முறிப்பில் விபத்து! இருவர் படுகாயம்
வவுனியா,மூன்றுமுறிப்பு ஏ9 வீதியில் இன்று(1) காலை வேன் ஒன்று, லொறி ஒன்றுடன் மோதியதில் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பியவர்களை, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணத்தை நோக்கிச் சென்ற வேன், சில்லை மாற்றுவதற்காக வீதியில் நிறுத்தப்பட்டிருந்து லொறியின் மீது மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்கு காரணம் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பில், வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.