தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கோவா, தமிழகத்தை கண்டித்து கர்நாடகாவில் முழு அடைப்பு

karnataka-bandhகோவா அரசை கண்டித்து கர்நாடகாவில் இன்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கர்நாடக மாநிலத்தின் கதக்,தார்வாட் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டுவரும் கலசா பண்டூரி குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கோவா அரசை கண்டித்து முழு அடைப்பு நடத்தப்பட்டது.

காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதை எதிர்க்கும் தமிழக அரசுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கோரிக்கைளை வலியுறுத்தி கன்னட அமைப்புகள் பெங்களூரு நகரின் முக்கிய வீதிகளில் பேரணி நடத்தின.

முழு அடைப்பு காரணமாக பெங்களூரு, மைசூரு, ஹுப்ளி உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. தமிழகத்தில் இருந்து சென்ற பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டன. நீலகிரி மாவட்டம் கக்கநல்லா வழியேயான, இருமாநில அரசு பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

Comments
Loading...