Designed by Iniyas LTD
சர்வதேச விசாரணை குறித்து உரிய நேரத்தில் முடிவு: வெங்கையா நாயுடு
இலங்கை மீது சர்வதேச விசாரணை கோருவது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர். இலங்கை அரசிடம் 2 முக்கிய விஷயங்கள் பற்றிப் பேசியுள்ளோம். முதலில், மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
நிரந்தரத் தீர்வு காண, இரு நாட்டுத் தலைவர்களும் இது பற்றிப் பேச வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். ஏனெனில் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன என்றார்,